ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 13 பேருக்கு பரிசோதனை செய்ததில், 138 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 97 ஆயிரத்து 707 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 157 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரத்து 448 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 643 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 1,616 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story