கவுந்தப்பாடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா; தொற்று பாதித்த பகுதி அடைக்கப்பட்டது
கவுந்தப்பாடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தொற்று பாதித்த பகுதி தகரம் வைத்து அடைக்கப்பட்டது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தொற்று பாதித்த பகுதி தகரம் வைத்து அடைக்கப்பட்டது.
4 பேருக்கு கொரோனா
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் தர்மாபுரி புதுக்காட்டு வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண், 55 வயது பெண், 40 வயது ஆண், 32 வயது பெண் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்குமே நோய் தொற்று உறுதியானது.
தகரத்தால் அடைப்பு
இதையடுத்து 4 பேரும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் தர்மாபுரி புதுக்காட்டு வீதி தகர ஓடுகள் வைத்து அடைக்கப்பட்டது.
கவுந்தப்பாடி பகுதியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story