தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயம்; பொதுமக்கள் கடும் அவதி


தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயம்; பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 27 Aug 2021 2:18 AM IST (Updated: 27 Aug 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

தாளவாடி
தாளாவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். 
மலைக்கிராமங்கள்
தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. தாளவாடியை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களை சேர்ந்தவர்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு செல்ல வேண்டும் என்றால் கர்நாடக மாநிலத்துக்குள் 15 கிலோ மீட்டர் புளிஞ்சூர் வழியாக சென்று தான் தமிழகத்தில் உள்ள ஆசனூர் பகுதியை அடைய முடியும். 
தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. 
‘நெகட்டிவ்’ சான்றிதழ்
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைபவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தாளவாடி பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் எங்களிடம் புளிஞ்சூர் சோதனை சாவடியில் உள்ள கர்நாடக மாநில வருவாய்த்துறையினர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்கின்றனர். சான்றிதழ் இருந்தால் மட்டுமே புளிஞ்சூர் வழியாக செல்ல அனுமதிக்கின்றனர். 
பேச்சுவார்த்தை நடத்தி...
கொரோனா தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அத்தியாவசிய தேவைக்கும், அவசர தேவைக்கும் கூட தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் சத்தியமங்கலம் செல்ல முடியால் தவித்து வருகின்றனர். 
எனவே சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகத்திடம், ஈரோடு மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, தாளவாடி மலைக்கிராம மக்களை புளிஞ்சூர் சோதனை சாவடி வழியாக செல்ல அனுமதிக்க உரிய நடவடிக்கை வேண்டும்,’ என்றனர். 

Next Story