சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.550-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.550-க்கு ஏலம்
x
தினத்தந்தி 27 Aug 2021 3:01 AM IST (Updated: 27 Aug 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.550-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 4 டன் பூக்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.577-க்கும், முல்லை ரூ.360-க்கும், காக்கடா ரூ.375-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.542-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.275-க்கும், செண்டுமல்லி ரூ.66-க்கும், பட்டுப்பூ ரூ.155-க்கும், ஜாதிமல்லி ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.440-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.35-ம், முல்லை ரூ.120-ம், காக்கடா ரூ.100-ம், ஜாதிமல்லி ரூ.50-ம், கனகாம்பரம் ரூ.110-ம், அரளி ரூ.40-ம், விலை உயர்ந்து விற்பனை ஆனது.

Next Story