ஈரோடு அருகே உள்ள சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்


ஈரோடு அருகே உள்ள சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Aug 2021 3:12 AM IST (Updated: 27 Aug 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே உள்ள சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு
ஈரோடு அருகே உள்ள சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரூ.40 கோடி ஒதுக்கீடு
ஈரோடு பஸ் நிலையத்தில் கட்டிடங்கள், மேற்கூரை, தூண்கள், நடைபாதை போன்றவை சேதம் அடைந்து உள்ளது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்தை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. இங்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், நவீன கழிப்பறைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாட்டு பணிகளை பல்வேறு கட்டங்களாக நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அதன்படி முதல் கட்டமாக கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிற்கும் பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி தென் மாவட்ட பஸ்கள் மட்டும் வந்து செல்லும் வகையில், சோலாரில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் தூய்மை பணி வேகமாக நடந்து வருகிறது.
தற்காலிக பஸ் நிலையம்
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு பஸ் நிலையத்தில் மேம்பாடு பணிகள் நடைபெற இருப்பதால், தென் மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்கள் மட்டும் சோலாரில் நிறுத்தும் வகையில் அங்கு தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்க தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உணவு வசதி போன்ற வசதிகள் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து ஈரோடு பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போது முதல் கட்டமாக தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் ரேக்குகளில் மட்டும் மேம்பாட்டு பணிகள் தொடங்க உள்ளது. மற்ற ரேக்குகளில் உள்ள பஸ்கள் வழக்கம்போல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story