சதிப்பழக்கத்தை குறிக்கும் வகையிலான 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கற்சிற்பங்கள் கண்டெடுப்பு
வாலாஜாபாத் அருகே சதிப்பழக்கத்தை குறிக்கும் வகையிலான 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஊத்துக்காடு கிராமம். இங்கு இருந்து கட்டவாக்கம் செல்லும் சாலையில் சாலையோரம் சிற்பங்கள் செதுக்கிய நிலையில் 2 கற்கள் உள்ளதாக வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் ரமேஷ் ஆகியோர் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதவன் தனது குழுவினருடன் ஊத்துக்காடு கிராமத்தில் கள ஆய்வு செய்து சாலையோரம் மண்ணில் புதைந்து காணப்பட்ட சிற்பக்கல்லை சுத்தம் செய்து பார்த்தனர்.
அவை முறையே 14 மற்றும் 15-ம் நூற்றாண்டை கற்சிற்பங்கள் என்பது தெரியவந்தது.
14, 15-ந் நூற்றாண்டு காலகட்டத்தில் ஒரு வீரன் தன் இனக்குழுவை காக்கவோ, ஊரை காக்கவோ, அல்லது நாட்டை காக்கவோ போர்க்களத்தில் போர் புரிந்து வீரமரணம் அடைந்தால் அந்த வீரனின் உடலுக்கு சடங்குகள் செய்து தீ மூட்டி அந்த தீயில் வீரனின் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிரை விட்டு விடுவார். இவ்வாறு நடைபெறும் செயலுக்கு சதி என்று பெயர். சதி நிகழ்வில் உயிர்விட்ட தம்பதியின் நினைவை போற்றும் வகையில் அவர்களின் உருவங்களை ஒரு கல்லில் சிற்பமாக செதுக்கி அந்த கல்லை நட்டு வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்
சோழர்கள், விஜய நகர மன்னர்கள் காலம்
ஊத்துக்காடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த கற்சிற்பம் 1½ அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. வலது பக்கம் வீரனின் உருவம் காணப்படுகிறது. வீரனின் தலையில் உள்ள கொண்டை நேராகவும், காதில் நீண்ட காதணிகளும், கழுத்தில் மணியாரமும், தோள்களில் வாகு வளையங்கள், கைகளில் காப்பு மற்றும் பட்டாடைகள் அணிந்து கால்களில் வீரக்கழல் போன்றவை காணப்படுகின்றன. மேலும் அவரது இடது பக்கம் மனைவியும் வணங்கிய நிலையில் காணப்படுகி்றார்.
அவரது கொண்டை இடதுபக்கமாக சாய்ந்த நிலையிலும் காதுகளிலும் கழுத்திலும் அணிகலன்கள், கைகளில் வளையல் மற்றும் உடலுக்கு பட்டாடை போன்றவை உள்ளது. இந்த கற்சிற்பம் சோழர்களின் இறுதி காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் இதன் அருகிலேயே இருந்த மற்றொரு கல்லானது 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கல்லில் இறந்த வீரனின் உருவமும், இடது பக்கம் மனைவியும் வலக்கையில் மலரை ஏந்திய நிலையில் காணப்படுகிறார்கள். இது விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்ததாகும் என்பது தெரியவந்துள்ளது.
பாதுகாக்க வேண்டும்
ஊத்துக்காடு கிராமம் பல்லவர், சோழர், காலங்களில் சிறப்பு பெற்ற ஊராக இருந்துள்ளது. ஊத்துக்காடு கிராமத்தில் மிக பெரிய கோட்டை ஒன்றும் உள்ளது. இந்த இரு கற்சிற்பங்களும் கோட்டை இருந்த இடத்திற்கு அருகில் கிடைத்துள்ளதால் இறந்த தம்பதியின் சிற்பங்களின் மீதுள்ள ஆடை, அணிகலன்கள் மற்றும் போர்வாள் உருவ அமைப்பை கொண்டு இறந்த ஆண்கள் இவரும் படைத்தளபதி அல்லது முக்கிய பொறுப்பில் உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என கருத வேண்டியுள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க வரலாற்று சின்னங்கள் யாரும் கவனிப்பாரற்று சாலையோரம் அழிந்து போகும் நிலையில் உள்ளது. கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு அடையாளமாக பறைசாற்றிகொண்டிருக்கும் இந்த அரிய வரலாற்று கல் பொக்கிஷங்களை தமிழக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்று உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம், மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story