பவானி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை; கடன் தொல்லையால் விபரீத முடிவு
பவானி அருகே கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தலைமை ஆசிரியர்
பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையம், விநாயகர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 56). இவர், குறிச்சி பெரியாண்டிபாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சித்ரா (51). இவரும் ஏமம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு மோகனப்பிரியா என்ற ஒரே ஒரு மகள் உள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
கடன் தொல்லை
பாஸ்கரன் சொத்து வாங்குவதற்காக பல இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய கடனுக்கு வட்டியும் அதிகமாகியுள்ளது.
கடன் கொடுத்தவர்களும் கடனை திரும்பக்கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியாததால் பாஸ்கரன் கடந்த சில தினங்களாகவே மனம் உடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
கடன் தொல்லையால் தலைமை ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story