ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு தடை: கோவில்கள் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் கோவிலுக்கு வெளியே நின்று தாிசனம் செய்தனா்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், இந்த 3 நாட்களுக்கு மட்டும் கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோடு ஈஸ்வரன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று நடைகள் சாத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனால் சாமி கும்பிட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில பக்தர்கள், கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி வழிபட்டனர். இதன் காரணமாக நேற்று முக்கிய கோவில்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Tags :
Next Story