மத்திய ஆயுத படைப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


மத்திய ஆயுத படைப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2021 3:26 AM IST (Updated: 28 Aug 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ஆயுத படைப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
மத்திய ஆயுத படைப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
மத்திய படைப்பிரிவு
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
மத்திய உள்துறை மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், மத்திய ஆயுதப்படையில் சி.ஏ.பி.எப்., என்.ஐ.ஏ. எஸ்.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவுகளில் மொத்தம் 25 ஆயிரத்து 271 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆண், பெண் இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம்.
18 வயது முதல் 23 வயது பூர்த்தி அடைந்தவர்கள், மத்திய, மாநில கல்வித்துறையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் படைவீரர்கள், 1984-ல் நடந்த கலவரம், 2002-ம் ஆண்டு குஐராத் மாநிலத்தில் நடைபெற்ற மதக்கலவரங்களில் உயிர்நீத்த வாரிசுதாரர்களுக்கு வயது வரம்பில் குறிப்பிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இணையதள முகவரி
தேசிய மாணவர் படையில் சேர்ந்து ஏ.பி.சி. சான்றிதழ் பெற்றவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். சம்பள விகிதம் ரூ.21 ஆயிரத்து 700 முதல் ரூ.69 ஆயிரத்து 100 ஆக நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மின்னஞ்சல் வழியாக வருகிற 31-ந்தேதிக்குள் http://www.crpf.gov.inமற்றும்http://www.ssc.nic.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவும் பொருட்டு, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் செயல்பாட்டில் உள்ளது. மேற்படி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 1-ந்தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0424-2275860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story