மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் 36 கண்காணிப்பு கேமராக்கள் + "||" + 36 surveillance cameras in Kanchipuram

காஞ்சீபுரத்தில் 36 கண்காணிப்பு கேமராக்கள்

காஞ்சீபுரத்தில் 36 கண்காணிப்பு கேமராக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீ தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாச்சலம் நகரில் 650 குடும்பங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நகரில் வசிப்போர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையின் அறிவுரைகளை யேற்று தங்களது பகுதிகளில் ரூ.8 லட்சம் மதிப்பில் 36 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில்:-
குற்றங்களை வெகுவாக தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருவதற்கும் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் குற்றச்செயலில் ஈடுபட எவரும் துணியமாட்டார்கள், எனவே, இதுபோல மற்ற குடியிருப்பு பகுதிகளிலும் பொதுமக்கள் தானாக முன்வந்து தங்களது பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், போலீஸ் துறை அதிகாரிகள், வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி காஞ்சீபுரம் மாவட்ட குழு சார்பில் காஞ்சீபுரம் பெரியார் தூண் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து மூதாட்டி யசோதா அம்மாள் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார்.
3. காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற 27 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.
4. காஞ்சீபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.2 கோடி சொத்து, ரூ.38 லட்சம் அபகரிப்பு 4 பேர் மீது வழக்கு
காஞ்சீபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.2 கோடி சொத்து, ரூ.38 லட்சத்து 35 ஆயிரம் அபகரித்ததாக சீட்டு கம்பெனி உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
5. காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலையா? 5 பேரிடம் போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.