கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Aug 2021 8:31 PM GMT (Updated: 28 Aug 2021 8:31 PM GMT)

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் நேற்று ஈரோடு வந்த ரிசர்வ் போலீஸ் படையினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் நேற்று ஈரோடு வந்த ரிசர்வ் போலீஸ் படையினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு ஊர்வலம்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய மக்களின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சைக்கிளில் ஊர்வலமாக சென்று உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த ஊர்வலம் 60 போலீசாருடன் கடந்த 22-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு வந்தது. துணை கமாண்டர்கள் ராஜேஷ், முகமது பையாஷ், மெடிக்கல் அலுவலர் டாக்டர் கண்ணன் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
காந்தி ஜெயந்தி
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன், என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் வி.பாலுசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட போலீசார் இரவில் தங்குவதற்கு கல்லூரி வளாகத்தில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் இருந்து புறப்படும் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக டெல்லி ராஜ்கோட்டிற்கு காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதி அன்று செல்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. ஊர்வலத்துக்கு தேவையான ஏற்பாடுகளை, தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில், மாநில போலீஸ்துறை இயக்குனர் சைலேந்திரபாபு செய்துள்ளார்.

Next Story