தம்பிக்கலை அய்யன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அந்தியூர் அருகே தம்பிக்கலை அய்யன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அந்தியூர் அருகே பொதியாமூப்பனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேர் திருவிழா மிகவும் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தேர் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு சாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள மாடசாமி, கருப்புசாமி, கொளத்தூர் அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
இக்கோவிலில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றால் அவர்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், பவானி, ஜம்பை, சிந்தகவுண்டம்பாளையம், வேம்பத்தி, வெள்ளாளபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story