காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 29 Aug 2021 1:49 PM GMT (Updated: 29 Aug 2021 1:49 PM GMT)

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செண்பகராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று நடப்பிலுள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 30-ந் தேதி (திங்கட்கிழமை) காஞ்சீபுரம் வைகுண்டபுரம் தெருவில் உள்ள டாக்டர் பி.எஸ்.சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், ஸ்ரீபெரும்புதூர், கச்சிப்பட்டு, குன்றத்தூர் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (தெற்கு) பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலும், குன்றத்தூர், லாலா சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறும்.

31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உத்திரமேரூர் சின்ன நாராசாம்பேட்டை தெருவில் உள்ள பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் உள்ள நல வாரிய உறுப்பினர்கள் அவர்களின் உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 2-வது தவணைக்கு காத்திருக்கும் நலவாரிய உறுப்பினர்கள அதற்கான சான்றினை நேரில் கொண்டு வந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story