2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x
தினத்தந்தி 29 Aug 2021 9:21 PM GMT (Updated: 2021-08-30T02:51:28+05:30)

பேரையூர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.

பேரையூர்,

பேரையூரை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 45).இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கி விட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இதேபோல் பேரையூரை சேர்ந்த பாண்டி (47) என்பவருடைய மோட்டார் சைக்கிளும் திருடு போயிருந்தது. இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story