வீடு புகுந்து 40 புறாக்களை திருடிய 3 பேர் கைது


வீடு புகுந்து 40 புறாக்களை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 10:44 PM GMT (Updated: 2021-08-30T04:14:49+05:30)

கே.என்.பாளையம் அருகே வீடு புகுந்து 40 புறாக்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டி.என்.பாளையம்
கே.என்.பாளையம் அருகே வீடு புகுந்து 40 புறாக்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புறாக்கள்
கே.என்.பாளையம் அருகே உள்ள தாசரிபாளையத்தை சேர்ந்தவர் மனோகர் (வயது 40). இவர் தனது வீட்டின் மாடியில் கூண்டு அமைத்து 60-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வந்துள்ளார்.
மனோகர் நேற்று முன்தினம் அதிகாலை புறாக்களுக்கு தீனி போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் கூண்டில் இருந்த புறாக்களை எடுத்து தாங்கள் வைத்திருந்த சாக்கு பையில் போட்டு கொண்டிருந்தனர்.
3 பேர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ‘திருடன், திருடன்’ என சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டதும் அவர்கள் அங்கிருந்து புறாக்களுடன் தப்பித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து மனோகர் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மனோகரின் புறாக்களை திருடியவர்கள் தாசரிபாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி (வயது 38), கே.என்.பாளையத்தை சேர்ந்த கருணாமூர்த்தி (24), சக்திவேல் (22) ஆகியோர் என்பதும், ெமாத்தம் 40 புறாக்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். 
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story