கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 30 Aug 2021 4:15 AM IST (Updated: 30 Aug 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கடத்தூர்
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடிவேரி அணை
கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து இங்கு ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை அங்கு உள்ள பூங்காக்களில் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்து செல்வார்கள்.
மேலும் அங்கு விற்கப்படும் சூடான மீன் வறுவல்களையும் வாங்கி சாப்பிடுவார்கள. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கொடிவேரி அணை சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அணைக்கு அனுமதிக்கப்படவில்லை.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தற்போது அரசு பூங்கா மற்றும் அணைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து அணையில் குளித்துவிட்டு செல்கின்றனர். சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினமும், நேற்றும் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டுச் சென்றனர்.

Next Story