மேலும் 2 பேருக்கு கொரோனா
தேனியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 1,154 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் தனியார் பரிசோதனை கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்த தேனியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 200 ஆக உயர்ந்தது. மேலும் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் நேற்று குணமாகினர். தற்போது மாவட்டத்தில் 86 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story