சென்னையில் கூடுதலாக 155 தடுப்பூசி முகாம்கள்; மாநகராட்சி அறிவிப்பு


சென்னையில் கூடுதலாக 155 தடுப்பூசி முகாம்கள்; மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 2:14 PM IST (Updated: 31 Aug 2021 2:14 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டலங்களுக்கு 3 தடுப்பூசி முகாம் என 45 தடுப்பூசி முகாம்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

இதையடுத்து ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் தடுப்பூசி போட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந்தேதி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 400 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். வீட்டின் அருகில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதால் தடுப்பூசி போட பொதுமக்கள் பலர் ஆர்வம் காட்டினர்.

இதை கருத்தில் கொண்டும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் நடத்தப்பட்டு வந்த 45 தடுப்பூசி முகாம்கள் தற்போது 200 தடுப்பூசி முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story