ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2021 11:43 AM GMT (Updated: 2021-08-31T17:13:46+05:30)

பெரிய காஞ்சீபுரம் வெள்ளக்குளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி. 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சீனிவாசன் தனது அண்ணனுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். சீனிவாசனை குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே பிச்சாவாடி பாலாற்று படுகையில் விஷம் குடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் அங்கு விரைந்து சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story