ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய் மண்டல் (வயது 46). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிவளூர் பகுதியில் தங்கி இருந்து இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.விஜய் மண்டல் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல வீட்டுக்கு நடந்து சென்று கொணடிருந்தார்.
சாவு
அப்போது அருகே இருந்த தனியார் தொழிற்சாலையில் 10 அடி உயரம் உள்ள மதில் சுவர் இடிந்து விஜய் மண்டல் மீது விழுந்தது. இதில் விஜய் மண்டல் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் மண்டல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மழையில் நனைந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story