போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2021 12:52 PM IST (Updated: 3 Sept 2021 12:52 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). சமூக வலைதளம் மூலமாக அரக்கோணம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சந்துருவை தேடிவந்தனர்.இந்த நிலையில் காஞ்சீபுரம் பகுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் விரைந்து சென்று சந்துருவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
1 More update

Next Story