மெகா சிறப்பு முகாமில் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 9500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம், சித்தராஜகண்டிகை உள்பட 16 ஊராட்சிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 3 இடங்கள், சிப்காட் வளாகம், 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என தாலுகாவில் மொத்தம் 26 இடங்களில் நேற்று (வெள்ளி) மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனில் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணம் செய்யப்பட்டிருந்த நிலையில் 9500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவிதது உள்ளனர்.
தடுப்பூசி முகாம்
கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்துவதற்காக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு அங்கமாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டையில் 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர் சாலையில் உள்ள திருமண மண்டபம், அண்ணா சிலை எதிரே, பேரூராட்சி அலுவலகம் எதிரே, மற்றும் நகர எல்லையில் உள்ள செக்போஸ்ட் பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டன.
5 ஆயிரம் பேர்
பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில், சுமார் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் கர்ப்பிணிகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். ஊத்துக்கோட்டையில் இதுவரை 5 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story