திருமங்கலம்,
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 55). இவர் தனியார் மில்லில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் திண்டுக்கல்லில் இருந்து தென்காசிக்கு காரில் மனைவி முத்துமேகலா உடன் சென்றார். காரை டிரைவர் முருகன் ஓட்டிச் சென்றார். திருமங்கலம் புதுப்பட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.