நடுநிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்


நடுநிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 6 Sept 2021 10:32 PM IST (Updated: 6 Sept 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

நடுநிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோவை மாவட்ட செயலாளர் பி.மணிகண்டன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் ஆனந்த கணேஷ், மாநில பொருளாளர் கே.தங்கவேலு, இணைச்செயலாளர் ஷசீனாபானு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி, உளவியல் ரீதியான பாதிப்புகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அனைத்து நடுநிலை பள்ளிக்கூடங்களிலும் அலுவலக பணியாளர், கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்களை உருவாக்கி ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும்.
* காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
* அனைத்து நடுநிலை பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களின் அடைவு திறன் அதிகரிக்க கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக பி.எஸ்.வீராகார்த்திக், செயலாளராக எஸ்.நளினி, பொருளாளராக ஆர்.சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினராக அருள், மாவட்ட துணைத்தலைவர்களாக என்.பி.தனகுமார், ஹாகிதா, இணைச்செயலாளர்களாக எம்.பாலகிருஷ்ணன், கே.இந்துமதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக எஸ்.பூபதி, எஸ்.சதீஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story