ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது


ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 7 Sept 2021 1:43 AM IST (Updated: 7 Sept 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தாளவாடி அருகே ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லாரி தீப்பிடித்து எரிந்தது
அரியலூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகேசன் (வயது 28) என்பவர் ஓட்டினார். தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் சென்றபோது லாரியில் இருந்து புகை வந்தது. இதனால் முருகேசன் லாரியை நிறுத்தினார். பின்னர் லாரியில் இருந்து வெளியே குதித்தார். அப்போது லாரி முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
டிரைவர் உயிர் தப்பினார்
உடனே இதுபற்றி டிரைவர் சாம்ராஜ்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால்  லாரி முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
தீப்பிடித்தபோது டிரைவர் உடனே லாரியில் இருந்து வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பேட்டரியில் இருந்து தீப்பொறி வெளிவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீப்பிடித்தபோது லாரியின் டயர்கள் `டமார் டமார்` என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
இது குறித்து சாம்ராஜ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story