விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2021 8:20 AM IST (Updated: 7 Sept 2021 8:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட பெண் போலீ்சுக்கு நீதி கேட்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம் தலைமையில் தொகுதி செயலாளர் ரஞ்சன், வழக்கறிஞர் பொற்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் டெல்லியில் பெண் போலீஸ் படுகொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தலைவர் சீனி முகம்மது, பொதுச்செயலாளர் ஆதம் மொய்தீன் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்பின் மாவட்ட தலைவி மரியம் தலைமையில் திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story