சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்


சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 7 Sep 2021 3:26 AM GMT (Updated: 7 Sep 2021 3:26 AM GMT)

சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள சாலையில் நேற்று காலை ‘வாக்கி-டாக்கி’ கருவி ஒன்று அனாதையாக கிடந்தது. அந்த கருவியை கண்டெடுத்த வேன் டிரைவர் ஆகாஷ், அண்ணாசாலை போலீசாரிடம் ஒப்படைத்தார். அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், ‘வாக்கி-டாக்கி’ கருவியை சாலையில் போட்டது யார்? என்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சென்னை மாநகராட்சி சுகாதாரதுறை ஆய்வாளர் சுப்பராயலு, தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அந்த ‘வாக்கி-டாக்கி’யை தவறுதலாக சாலையில் போட்டுச்சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் ‘வாக்கி-டாக்கி’ கருவி சுப்பராயலுவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கண்டெடுத்த ‘வாக்கி-டாக்கி’ கருவியை பத்திரமாக ஒப்படைத்த வேன் டிரைவர் ஆகாசுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story