சொத்து தகராறில் மோதல்: வீடு புகுந்து 3 பேரை கொல்ல முயற்சி
சொத்து தகராறில் மோதல்: வீடு புகுந்து 3 பேரை கொல்ல முயற்சி கத்தியால் குத்திய வாலிபர் கைது.
சென்னை,
சென்னை ஆயிரம்விளக்கு ரங்கூன் தெருவைச் சேர்ந்தவர் மணி (வயது 57). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணியின் பக்கத்து வீட்டுக்காரர்களான ஹரிபிரசாத் (26), அவரது சகோதரர் அருண் ஆகியோர் மணியின் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்தனர். தகராறு முற்றி, மணி அவரது மனைவி சரசு, மகன் மகேஷ் ஆகியோர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டனர். இதில் 3 பேரும் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆயிரம்விளக்கு போலீசார் இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஹரிபிரசாத் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் அருணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story