தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Sep 2021 5:47 AM GMT (Updated: 7 Sep 2021 5:47 AM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினையொட்டி பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் வருகின்ற 30-ந்தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான ப்ளூ பிரிண்ட் வரைபடம் (6 நகல்கள்), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வரி ரசீது, ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடன் தற்காலி உரிமத்தின் ஆணையினை வருகின்ற 15-10-2021-ந்தேதியிலிருந்து இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Next Story