ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாயில் தமிழ் ஆராய்ச்சியாளர் விருது
ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாயில் தமிழ் ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
துபாய் மெரினா தேசெர்ட் ரோஸ் கப்பலில் பலதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும், வணிகர்களுக்குமான பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஒருங்கிணைந்த பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் முதல் பெண் தமிழ் ஆராய்ச்சியாளர் விருது ஈரோட்டை சேர்ந்த மு.ரா.ஸ்ரீரோகிணிக்கு ஷேக் ஹமீத் பின்காலித் அல் காசிமி, மாயா அல் ஹவாரி ஆகியோர் வழங்கினார்கள். உலக தமிழ் ஆராய்ச்சியாளரான ஸ்ரீரோகிணி 25 ஆண்டுகளாக தமிழ் கலை மற்றும் இலக்கியத்தில் ஈடுபட்டு வருகிறார். நிகழ்ச்சியில் அமீரகவாசிகள், பல்வேறு விருந்தினர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story