தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு 2,600 டன் அரிசி ரெயிலில் வந்தது


தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு 2,600 டன் அரிசி ரெயிலில் வந்தது
x
தினத்தந்தி 8 Sept 2021 2:47 AM IST (Updated: 8 Sept 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு 2,600 டன் அரிசி ரெயிலில் வந்தது.

தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான ரேஷன் அரிசி பல்வேறு இடங்களில் இருந்து நெல், அரிசியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் இருந்து புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி 42 பெட்டிகள் கொண்ட ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
1 More update

Next Story