கோபி கச்சேரி மேட்டில் அமைக்கப்பட்டு உள்ள வேகத்தடையை அப்புறப்படுத்த வேண்டும்
கோபி கச்சேரி மேட்டில் அமைக்கப்பட்டு உள்ள வேகத்தடையை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி டவுன் கச்சேரி மேடு பஸ் நிறுத்தம் பகுதியில் காலை, மாலை என இரு வேளைகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையை கடந்து செல்வது வழக்கம். அவ்வாறு சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் உயரம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வேகத்தடை அருகே வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகிறார்கள். குறிப்பாக வயதானவர்களும், பெண்களும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து செல்கிறார்கள். இதேபோல் வேகமாக வரும் வாகனங்கள் இந்த வேகத்தடை உள்ள இடத்தை கடக்கும்போது தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளாவதுடன், கனரக வாகனங்களின் முன்புற கண்ணாடி உடைந்தும் விடுகிறது. பொதுவாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்படும் வேகத்தடைகள் உயரம் குறைவாக இருக்கும். ஆனால் இங்கு வழக்கத்துக்கு மாறாக வேகத்தடை அதிகமான உயரத்துக்கு உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த வேகத்தடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோபி பகுதியை சேர்ந்த வயதானவர்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story