வால்பாறை கருமலை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு


வால்பாறை கருமலை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 8 Sept 2021 11:31 PM IST (Updated: 8 Sept 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை கருமலை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

வால்பாறை

வால்பாறை அருகே  கருமலையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதியும், அதைத்தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேர்பவனி, நவநாட்கள் மற்றும் கூட்டுபாடல் திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம். 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டில் தேர்பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. 

கொரோனா தடுப்ப வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்த இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சிறப்பு பாடல் கூட்டு திருப்பலிகள் பங்குகுரு மரிய ஜோசப் தலைமையில் நடந்தது. 

இதில் உதவி பங்கு குருக்கள் ரஞ்சித், பெனிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். வழிபாட்டை முன்னிட்டு ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


Next Story