அச்சரப்பாக்கம் பகுதியில் 2 மாணவிகள், ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் கெரோனா ஊரடங்குக்கு பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் தொழுப்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பள்ளிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story