நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு  தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 9 Sept 2021 5:24 PM IST (Updated: 9 Sept 2021 5:24 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 83 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 394 கன அடி தண்ணீரும், உபரிநீராக வினாடிக்கு 1,606 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பவானி ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,024 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 477 கன அடி தண்ணீரும், உபரிநீராக வினாடிக்கு 2,523 கன அடியும் திறக்கப்பட்டது. பவானி ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story