மாவட்ட செய்திகள்

ஈரோட்டில்ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா + "||" + korona

ஈரோட்டில்ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

ஈரோட்டில்ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா
ஈரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடு மாவட்டமும் இடம்பெற்று உள்ளது. தினமும் சுமார் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற மாவட்டங்களை காட்டிலும் பாதிப்பு அதிகமாக இருப்பதால், கொரோனா பரிசோதனையும் அதிகமாக எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் அண்ணாமலை வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு பாதிப்பு குறைவாக காணப்படுவதால் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சுகாதார பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே அண்ணாமலை வீதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 17 பேருக்கு கொரோனா
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. மேலும் 7 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கரூரில் 23 பேருக்கு கொரோனா
கரூரில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 10 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவும் அபாயம் இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பண்டிகை காலம் என்பதால், இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.