மாவட்ட செய்திகள்

பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + arppattam

பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதிய உயர்வு அடிப்படையில் உடனடியாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 11 சதவீத டி.ஏ.வை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் கே.பூபதி கலந்துகொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் தனசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் முருகேஷ், பொருளாளர் லிங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
2. தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
3. ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. கல்லார்குடி மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கல்லார்குடி மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்