அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு 4 கால்களுடன் கூடிய சேவலை காணிக்கையாக வழங்கிய பக்தர்


அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு  4 கால்களுடன் கூடிய சேவலை காணிக்கையாக வழங்கிய பக்தர்
x
தினத்தந்தி 9 Sep 2021 3:49 PM GMT (Updated: 9 Sep 2021 3:49 PM GMT)

4 கால்களுடன் கூடிய சேவலை அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே  பிரசித்தி பெற்ற  பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வினோத உறுப்புகளை உடைய கோழி, மாடு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள்.
இந்த நிலையில் பக்தர் ஒருவர் தனது வீட்டில் 4 கால்களுடன் கூடிய அதிசய சேவலை வளர்த்து வந்தார்.
நேற்று இவர்  தான் வளர்த்து வந்த 4 கால்களுடன் கூடிய சேவலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த சேவல் கோவில் வளாகத்தை சுற்றி வருகிறது. கோவில் பணியாளர்கள் சேவலை பராமரித்து வருகிறார்கள். 
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த சேவலை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். அந்த சேவல் தின்ன தானியங்களையும் பக்தர்கள் வழங்கி வருகிறார்கள்.
 பொதுவாக  வினோத உறுப்புகள் உள்ள ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வீட்டில் வளர்க்க மாட்டார்கள். அவற்றினை கோவிலில் காணிக்கையாக வழங்கி விடுவார்கள். அதேபோல் பக்தர் ஒருவர் 4 கால்களுடன் கூடிய சேவலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story