‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: அதிக ஒலி எழுப்பியபடி சென்ற வாகனங்களில் ஒலிப்பான்கள் பறிமுதல்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: அதிக ஒலி எழுப்பியபடி சென்ற வாகனங்களில் ஒலிப்பான்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Sep 2021 4:55 PM GMT (Updated: 9 Sep 2021 4:55 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அதிக ஒலி எழுப்பியபடி சென்ற வாகனங்களில் ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை வழியாக தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து பஸ், லாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் பெரும்பாலான வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் (ஹார்ன்) பொருத்தி அதிக ஒலி எழுப்பி செல்வதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்த செய்தி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தினத்தந்தியில் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி சக்திவேல் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பாஸ்கரன், சுகந்தி ஆகியோர் நேற்று சென்னிமலை பஸ் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக அதிக ஒலி எழுப்பியபடி வந்த தனியார் பஸ் மற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஹார்ன்) பறிமுதல் செய்தனர்.
மேலும் வாகன ஓட்டிகளிடம், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவற்றை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
-------------

Next Story