கும்மிடிப்பூண்டி அருகே முதியவர் வெட்டிக்கொலை 6 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே முதியவர் வெட்டிக்கொலை 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2021 5:55 AM IST (Updated: 10 Sept 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தெர்டர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் எழில் (வயது 21). கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (30) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் என மொத்தம் 6 பேர் சேர்ந்து எழிலிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து எழில் தனது உறவினரான ஜீவா (29) என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜீவாவுடன், எழிலும் மேற்கண்ட நபர்களை எளாவூரில் மடக்கி தட்டி கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஜீவா மீது அவர்கள் 6 பேரும் ஆத்திரம் அடைந்தனர்.

கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மேற்கண்ட 6 பேரும் துராபள்ளத்தில் உள்ள ஜீவாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஜீவாவின் தந்தை மோகனிடம் (62) வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் கவலைக்கிடமான மோகன் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஜீவானந்தம் (28), அண்ணாமலை (27), கோபி (30), பிரேம்நாத்(29), விஜய்ராஜ் (28) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story