கோபி அருகே வீட்டில் தீ விபத்து


கோபி அருகே வீட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 10 Sep 2021 9:37 PM GMT (Updated: 2021-09-11T03:07:46+05:30)

கோபி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

கடத்தூர்
கோபி அருகே உள்ள குட்டையபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 73). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை விறகு அடுப்பில் சமையல் செய்து விட்டு தீயை அணைக்காமல் வேலைக்கு சென்றுவிட்டார். 
இந்த நிலையில் அடுப்பில் இருந்த தீ திடீரென குடிசை வீட்டில் பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வீட்டில் பிடித்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story