அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை: முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை: முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 Sept 2021 3:13 AM IST (Updated: 11 Sept 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அம்மாபேட்டை
ஈரோடு மாவட்ட எல்லையான சின்னபள்ளம் பகுதியில் அம்மாபேட்டை போலீஸ் சார்பில் நிரந்தர வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி உள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் சின்னபள்ளம் சோதனைசாவடியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர்கள் வள்ளி குமார், ஜெகதீஷ்குமார், வெங்கடேஸ்வரன், சரவணன், சீனிவாச ரகுபதி, ராஜசேகர் ஐசக் ஆகியோர் அடங்கிய குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா? என்று சோதனை செய்தனர். இதில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்கள், கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை ஆய்வு செய்தனர்.

Next Story