மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இன்று கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது + "||" + In Pondicherry today the corona impact is less than 50

புதுச்சேரியில் இன்று கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது

புதுச்சேரியில் இன்று கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 28 பேருக்கும், காரைக்கால் மற்றும் மாஹே பகுதிகளில் தலா 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,675 ஆக உயர்ந்துள்ளது. 

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,940 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 126 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்கத்தில் புதிதாக நேற்று 748 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 7,683 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.88 கோடியாக உயர்ந்துள்ளது.
3. சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. மேற்கு வங்கத்தில் நேற்று புதிதாக 762 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 7,674 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் நேற்று 775 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,307 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.