மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Sep 2021 3:07 PM GMT (Updated: 2021-09-11T20:37:38+05:30)

கோபியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெகநாதன் தலைமை தாங்கி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விஸ்வநாத், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கீர்த்தனா, முன்னாள் மாவட்ட நீதிபதி செங்கோட்டையன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அதில் 145 வழக்குகளில் 54 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரத்து 523-க்கு தீர்வு காணப்பட்டது.

Next Story