மண்பாண்ட தொழிலாளி வெட்டிக்கொலை


மண்பாண்ட தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 11 Sep 2021 9:13 PM GMT (Updated: 2021-09-12T02:43:39+05:30)

அந்தியூர் அருகே மண்பாண்ட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அந்தியூர் அருகே மண்பாண்ட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 
மண்பாண்ட தொழிலாளி
அந்தியூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 50). மண்பாண்டம் செய்யும் தொழிலாளி. இவருடைய முதல் மனைவி மல்லிகா (45). 2-வது மனைவி சசிகலா (40).  முதல் மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி அர்ஜூனன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். யாரோ மர்ம நபர்கள் அர்ூனனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரிந்தது. 
சொத்துக்காகவா?...
அக்கம் பக்கத்தினர் அதை பார்த்து பதறிப்போய் அர்ஜூனனை மீட்டு, சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அர்ஜூனன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். 
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 
சொத்துக்காக அர்ஜூனன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்கள். 
 தனிப்படை
இதேபோல் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். 
மேலும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில்   தனிப்படை போலீசார் நேற்று இரவு  சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

Related Tags :
Next Story