மாவட்ட செய்திகள்

ஈரோடு பஸ் நிலையத்தில்பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடம் இடிப்பு + "||" + busstand

ஈரோடு பஸ் நிலையத்தில்பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடம் இடிப்பு

ஈரோடு பஸ் நிலையத்தில்பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடம் இடிப்பு
ஈரோடு பஸ் நிலையத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடம் இடிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில், பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்தி ரோடு பகுதியில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டு இருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டன.
தற்போது சத்தி ரோடு பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடிப்பதற்கான வேலையை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி, அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த டீ, பழக்கடைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் காலி செயப்பட்டன. பின்னர் இரும்பு தகரத்தால் கட்டிடம் முழுவதும் மற்றும் நாமக்கல் பஸ் நிறுத்தும் இடத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 2 பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
திருத்தங்கல் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சாத்தூர் பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்படுமா?
சாத்தூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. திறந்தவெளி மதுபாராக மாறும் ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம்
ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம் திறந்தவெளி மதுபாராக மாறி வருகிறது.
4. புறநகர் பஸ் நிலையம்
அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.