காஞ்சீபுரம் அருகே விரைவில் கைத்தறி பட்டு பூங்கா தொடங்க நடவடிக்கை: அமைச்சர் காந்தி
காஞ்சீபுரம் அருகே விரைவில் கைத்தறி பட்டு பூங்கா தொடங்க நடவடிக்கை சர்மேற்கொள்ளப்படும் என்று அமைச் காந்தி தெரிவித்தார்.
கைத்தறி பட்டு பூங்கா
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் 75 ஏக்கர் பரப்பளவில் ரூ.102.83 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவை தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு மேற்கொண்டனர்.இந்த பூங்காவில் கைத்தறி நெசவு, பட்டு சாயமிடுதல், பருத்தி சாயமிடல், தோய்ச்சல் மற்றும் ஓடல், எம்பிராய்டரி மற்றும் கார்மெண்டிங் ஆகிய இனங்களில் 82 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
25 சதவீத பணிகள்
பின்னர் அமைச்சா் ஆா்.காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா பணியானது கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகளை தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 2 மாத காலத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் இங்கு நடைபெற்றுவரும் பணிகளை துரிதப்படுத்தி வெகுவிரைவில் பட்டு பூங்கா தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் முதன்மை செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ஜி.செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story