செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி: கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Sept 2021 4:42 AM IST (Updated: 12 Sept 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு உத்தரவுபடி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 67 ஆயிரத்து 322 பேருக்கு முதல் தவணையும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 256 பேருக்கு 2 வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 19 லட்சத்து 16 ஆயிரத்து 412 பேர் உள்ளனர்.

தடுப்பூசி முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 906 இடங்களில் நடைபெறும் மாபெரும் கொரோனா தொற்று தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுநாள் வரை கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் 2-வது தவணை செலுத்தி கொள்ளாதவர்கள். உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்து கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story