மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதல்; பெண் பலி 5 பேர் படுகாயம் + "||" + Private bus collides with motorcycles near Kanchipuram; Female killed, 5 injured

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதல்; பெண் பலி 5 பேர் படுகாயம்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதல்; பெண் பலி 5 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சீபுரம்,

ராணிப்பேட்டை மாவட்டம் அருங்குன்றம் கிராமம் கீழண்டை தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 32). இவரது உறவினர்கள் மணிகண்டன் (31), மாணிக்கம்மாள் (53), யோகலட்சுமி (9), சரஸ்வதி (37), தருண் (11). இவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் காஞ்சீபுரம் மாவட்டம் கூரம் கிராமத்தில் இருந்து அருங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தணிகாசலம் மற்றும் மணிகண்டன் ஓட்டிச்சென்றனர்.


மேலம்பி என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த ஒரு தனியார் நிறுவன பஸ், மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணிக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

5 பேர் படுகாயம்

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த தணிகாசலம், யோகலட்சுமி, மணிகண்டன், சரஸ்வதி, தருண் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்ககுப்பதிவு செய்து தனியார் நிறுவன பஸ் டிரைவரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்த குமார் (41) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கறம்பக்குடி அருகே இருதரப்பினரிடையே மோதலில் 4 பேர் காயம்; சாலை மறியல் போலீசார் குவிப்பு
கறம்பக்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
2. ரஷ்யாவில் தொடரும் கொரோனா பலி: ஒரேநாளில் 1,075 பேராக உயர்வு!
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி
கப்பலால் மோதி படகு மூழ்கடித்த சம்பவத்தில், கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
4. போலீஸ் காவலில் விசாரணை கைதி பலி: குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் பிரியங்கா காந்தி
உ.பி.யில் போலீஸ் காவலில் விசாரணை கைதி பலியான சம்பவத்தில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.
5. கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலி
கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியானார்கள். அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டன.