மாவட்ட செய்திகள்

வெள்ளோடு அருகே தொழிலாளி படுகொலை- நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார் + "||" + murder

வெள்ளோடு அருகே தொழிலாளி படுகொலை- நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்

வெள்ளோடு அருகே தொழிலாளி படுகொலை- நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்
வெள்ளோடு அருகே படுகொலை செய்யப்பட்ட தொழிலாளி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
சென்னிமலை
வெள்ளோடு அருகே படுகொலை செய்யப்பட்ட தொழிலாளி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே ராக்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் செல்வன் என்கிற சண்முகசுந்தரம் (வயது 38). இவர் வெள்ளோடு பகுதியில் உள்ள ஒரு மது பான பாரில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கமலா.  செல்வனுக்கும், கமலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்து உள்ளது. இதனால் செல்வனிடம் கோபித்துக்கொண்டு கமலா தனது 5 வயது மகனுடன் நத்தக்காட்டுவலசில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன்காரணமாக செல்வன் தனது தாயார் பழனியம்மாளுடன் வசித்து வந்தார். செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
கொலை
கடந்த 10-ந் தேதி காலையில் வெள்ளோடு மாரியம்மன் கோவிலில் நடந்த உறவினர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது தாய் பழனியம்மாளிடம் கூறிவிட்டு செல்வன் சென்று உள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், வெள்ளோடு அருகே கனகபுரம் ரோட்டில் மணக்காட்டுத்தோட்டம் என்ற பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் செல்வன் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
வலைவீச்சு
இதுபற்றி வெள்ளோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வனின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை கார் டிரைவர் கைது
கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2. காதல் ஜோடி ஆணவக் கொலை வழக்கில் விவசாயிக்கு தூக்கு தண்டனை
விருத்தாசலம் காதல் ஜோடி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு தூக்கு தண்டனையும், போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
3. நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை
வாத்தலை அருகே நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
4. மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்
மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. பா.ஜனதா பிரமுகர் படுகொலை
தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.